தமிழா..! தமிழ் படி..! வழங்கும் கற்பித்தல் முறையில் என்னென்ன புதுமைகள் உள்ளன?
‘தமிழா..! தமிழ் படி..!’ இணையதளத்தின் கற்பித்தல் முறையானது குழந்தைகளின் உளவியல் பண்புகளையும், தமிழ் மொழியின் இயல்புகளையும் முழுமையாகப் புரிந்துகொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் மொழியை முதலில் கேட்டுப் பழகுவதும், கேட்டவற்றைப் பேசிப் பழகுவதும், பேசியதை வாய்விட்டு வாசித்துப் பழகுவதும், வாசித்துக் காட்டியவற்றை எழுதிப் பழகுவதும் என்ற படிப்படியான அணுகுமுறையில் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கப்படுகின்றது.
புதிய உத்திகள்
- கேட்பதைத் திருப்பிச் சொல்லுதல் (Listen and Repeat)
- சொற்களை வாயால் எழுத்துக் கூட்டுதல் (Spell the words orally)
- வாசிப்பதற்கு முன் வாய்மொழிப் பயிற்சி செய்தல் (Oral practice prior to reading)
- குழந்தைகள் இரண்டிரண்டு பேராகவோ, சிறு குழுவினராகவோ கற்றுப் பழகுதல் (Practice in pairs/small groups)
- விளையாட்டு முறையில் சொல்லி மகிழ்தல் (Active and playway methods)
- கவிதைப் பாட்டுகளை வாசிப்புப் பயிற்சிக்குப் பயன்படுத்துதல் (Simple rhymes as reading texts)
- குழந்தைகள் போதுமான வாசிப்புப் பயிற்சி பெற்ற பிறகே, அவர்களுக்கு எழுத்துப் பயிற்சியளித்தல் (Writing practice only after enough reading practice)